குண்டும், குழியுமான தோகூர்-வேங்கூர் சாலையை சீரமைக்க வேண்டும்
குண்டும், குழியுமான தோகூர்-வேங்கூர் சாலையை சீரமைக்க வேண்டும்
தஞ்சை, திருச்சி மாவட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதிலும் இருந்து பார்த்து வியக்கத்தக்க ஒரு அணையாக விளங்குவது கல்லணை. கல்லணைக்கு திருச்சியில் இருந்து இரண்டு சாலை வழிகள் உள்ளன. திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து சர்க்கார் பாளையம், வேங்கூர் வழியாக கல்லணை சென்றடையும் சாலை பகுதியில் தஞ்சை மாவட்டம் கல்லணை தொடங்கி திருச்சி மாவட்டம் வேங்கூர் வரை சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. இதற்காக தோகூர் காவிரி கரையில் தடுப்புச்சுவர் எழுப்பி சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. தோகூர் கிளை வாய்க்கால் தலைப்பு பகுதியில் இருந்து வேங்கூர் வரை உள்ள 1½ கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. கல்லணையை காண்பதற்கு விடுமுறை நாட்களில் ஏராளமான மக்கள் இரண்டு சக்கர வாகனத்திலும், பஸ்களிலும் வரும் போது இந்த சாலையால் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான தோகூர்-வேங்கூர் சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.