வாலிபரை கத்தியால் வெட்டிய அண்ணன் கைது

விழுப்புரம் அருகே வாலிபரை கத்தியால் வெட்டிய அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-02 18:44 GMT

விழுப்புரம் அருகே கீழ்முத்தாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன் மகன் சக்திபாலா (வயது 34). இவருடைய அண்ணன் சரவணன் (41) என்பவரும் சுப்பம்பேட்டையை சேர்ந்த பாண்டியன் என்பவரும் தகராறு செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சக்திபாலா, பாண்டியனுக்கு ஆதரவாக தனது அண்ணன் சரவணனை விலக்கி விட்டுள்ளார். இதனால் சரவணன், தனது தம்பி சக்திபாலாவிடம், நீ எப்படி பாண்டியனுக்கு ஆதரவாக செயல்படுவாய் எனக்கேட்டு அவரை திட்டி கத்தியால் வலது தோள்பட்டையில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சக்திபாலா, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து சக்திபாலா, விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்