பெண்ணின் வீட்டிற்கு கத்தியுடன் வந்த காதலன் கைது

பெண்ணின் வீட்டிற்கு கத்தியுடன் வந்த காதலன் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-06 18:04 GMT

புதுக்கோட்டை சாந்தநாதபுரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த கவுதம் (வயது 26) முகநூலில் பழகி வந்தார். மேலும் அந்த பெண்ணை கடந்த சில வருடங்களாக அவர் காதலித்துள்ளார். இந்த நிலையில் தனக்கு வேறு நபர் ஒருவருடன் திருமணம் செய்ய உள்ளதாக காதலனிடம் அந்த பெண் தெரிவித்திருக்கிறார். மேலும் கவுதமுடனான பழக்கத்தை அவர் துண்டித்துள்ளார். இந்த நிலையில் ஆத்திரமடைந்த கவுதம், புதுக்கோட்டை சாந்தநாதபுரத்தில் உள்ள அந்த பெண்ணின் வீட்டிற்கு  வந்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் கையில் கத்தி வைத்திருந்தார். இது குறித்து பெண்ணின் தரப்பினர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து கவுதமை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். மேலும் பெண்ணின் பெற்றோர் தரப்பில் அளித்த புகாரின் பேரில் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்