சிறுமியை கடத்திய வாலிபர் கைது
சிறுமியை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசியை சேர்ந்த 15 வயது சிறுமி திடீரென காணாமல் போனார். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து அந்த சிறுமியை தேடி வந்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் டிரைவராக பணியாற்றும் வீரபுத்திரன் (வயது 32) என்பவருக்கும், சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து சிறுமியும், வீரபுத்திரனும் கடந்த 1 வருடமாக பழகி வந்துள்ளனர். இந்தநிலையில் சிறுமி வீட்டை விட்டு வெளியேறி டிரைவர் வீரபுத்திரனனுடன் உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர். அங்கு கடந்த 4 நாட்களாக குடும்பம் நடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து வீரபுத்திரனை சிவகாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் இதில் 2 குழந்தைகளின் தந்தையான வீரபுத்திரன் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை கடத்தி சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து சிறுமியை கடத்தி சென்று குடும்பம் நடத்தியதாக போலீசார் வழக்குபதிவு செய்து வீரபுத்திரனை கைது செய்தனர்.