விளையாட்டு விபரீதமானது: பாத்திரத்துக்குள் சிக்கி தவித்த சிறுவன் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்

விழுப்புரம் அருகே விளையாட்டு விபரீதமானது. பாத்திரத்துக்குள் சிக்கி தவித்த சிறுவனை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

Update: 2022-06-02 18:39 GMT

திருவெண்ணெய்நல்லூர், 

விழுப்புரம் அடுத்த திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பெரியசெவலை கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மனைவி பாக்கியலட்சுமி. இவா்களது மகன் யஸ்வந்த் (வயது 3). இவன் நேற்று காலை வீட்டில் இருந்த சில்வர் பாத்திரத்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவன் பாத்திரத்துக்குள் அமர்ந்து விளையாடினான்.

அந்த சமயத்தில் திடீரென பாத்திரத்தின் உள்ளே சிறுவன் யஸ்வந்த் சிக்கி கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தபடி கதறி அழுதான். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவனை பாத்திரத்தில் இருந்து வெளியே எடுக்க முயன்றனர். மேலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் சேர்ந்து பாத்திரத்தில் சிக்கிய சிறுவனை மீட்கும் முயற்சியில் இறங்கினர். ஆனால் அந்த முயற்சி தோல்விலேயே முடிந்தது.

இதனால் செய்வதறியாது தவித்த சிறுவனின் பெற்றோர் மற்றும் அப்பகுதியினர் இது பற்றி திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இரும்பு வெட்டும் கத்தரிக்கோலால் பாத்திரத்தை பக்குவமாக வெட்டி சிறுவனை பத்திரமாக மீட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்