தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த சிறுவன் பலி
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த சிறுவன் பலியானார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நத்தம்பட்டி கீழுரை சேர்ந்தவர் கற்பகவல்லி. இவருடைய மகன் அய்யனார் (வயது 5). அதேபகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்த இவன், வீட்டின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தான்.
உடனே அவனை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுவன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சோக சம்பவம் குறித்து கற்பகவல்லி கொடுத்த புகாரின் பேரில் நத்தம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.