சிறுவன் திடீர் சாவு
திருக்கோவிலூர் அருகே திடீரென மயங்கி விழுந்த சிறுவன் இறந்தான்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள முருக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் மகன் சந்தோஷ் (வயது 16). இவன் அதே ஊரில் உள்ள ஏழுமலை என்பவருக்கு சொந்தமான மோட்டார் பம்பில் குளிக்க சென்றான். இந்த நிலையில் பம்பு செட் அருகே சந்தோஷ் திடீரென மயங்கி விழுந்து இறந்தான். இது குறித்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து சிறுவன் மோட்டார் பம்பில் குளிக்கும் போது தவறி விழுந்து இறந்தானா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகிறார்.