விபத்தில் சிறுவன் பலி

அருப்புக்கோட்டையில் விபத்தில் சிறுவன் பலியானார்.

Update: 2023-04-05 20:21 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை பகுதியை சோ்ந்த 17 வயது சிறுவன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ெரயில்வே மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது அரசு பஸ்சை கடக்க முயன்ற போது எதிரே வந்த கார், மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தடுமாறி கீழே விழுந்த அந்த சிறுவன் மீது பஸ்சின் பின்பக்க டயர் ஏறி இறங்கியதில் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்