விபத்தில் சிறுவன் பலி

சிவகாசி அருகே விபத்தில் சிறுவன் பலியானார்.

Update: 2023-01-10 18:52 GMT

சிவகாசி, 

சிவகாசி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் மோட்டார் சைக்கிளில் சிவகாசி-விருதுநகர் ரோட்டில் வந்து கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் அந்த சிறுவன் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த சிறுவனை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்