சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை

சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

Update: 2022-09-27 23:03 GMT

கொள்ளிடம் டோல்கேட்:

திருச்சி மாவட்டம், வாத்தலை அருகே உள்ள செந்தாமரைக்கண் பகுதியை சேர்ந்த செல்வக்குமாரின் மகன் லோகேஷ்(வயது 17). 9-ம் வகுப்போடு படிப்பை நிறுத்திய இவர் கட்டிட வேலைக்கு சென்று கொண்டிருந்தான். இந்நிலையில் நேற்று வீட்டிலிருந்த லோகேஷ். அவரது தாய் ராஜேஸ்வரி கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வருவதற்குள் வீட்டில் உள்ள மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து லோகேஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்