ஓடையில் பிணமாக கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது

ஓடையில் பிணமாக கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது

Update: 2022-11-08 18:37 GMT

வாலாஜாவை அடுத்த சாத்தம்பாக்கம் கிராம கால்நடை தீவனம் பண்ணையையொட்டி வனத்துறைக்கு சொந்தமான ஓடையில் நீரில் அடையாளம் தெரியாத பெண் பிணம் கிடந்தது. சிவப்பு சுடிதார் அணிந்திருந்த அந்த பெண் குறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இறந்து பிணமாக கிடந்த பெண் காவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள ராமநாதபுரம் காலனி காந்தி தெருவை சேர்ந்த நாகராஜன் மகள் ரேஷ்மலதா (வயது 27) என்பது தெரியவந்தது. இவர் கடந்த மாதம் 22-ந்தேதி வீட்டை விட்டு சென்றவர் மாயமானவராவார். இது குறித்து வெளியூரில் பணியாற்றும் ரேஷ்மலதாவின் கணவர் கோபிக்கு தெரிவிக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் ரேஷ்மலதாவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது சாவு குறித்து வாலாஜா போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்