கிணற்றில் கிடந்த முதியவர் பிணம்

கிணற்றில் கிடந்த முதியவர் பிணம் மீட்கப்பட்டது.

Update: 2023-05-22 19:12 GMT

கறம்பக்குடி அருகே உள்ள ரெகுநாதபுரம் ஆதிதிராவிடர் குடியிருப்பை சேர்ந்தவர் சண்முகம் (வயது 60). இவருக்கு வலிப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் ரெகுநாதபுரம் கடைவீதிக்கு சென்றவர் இரவு வீடு திரும்ப வில்லை. இந்நிலையில் நேற்று காலை ரெகுநாதபுரம் -புது விடுதி சாலையில் உள்ள ஒரு தோட்டத்தின் கிணற்றில் சண்முகம் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் ரெகுநாதபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சண்முகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்