காரை சேதப்படுத்திய காட்டெருமை

காரை சேதப்படுத்திய காட்டெருமையால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-09-11 14:54 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரி, அதன் சுற்று வட்டார பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் வனவிலங்குகளால் பொதுமக்களுக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் டானிங்டன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரை காட்டெருமை ஒன்று ஆக்ரோஷமாக தனது கொம்புகளால் தூக்கி சிறிது தூரம் இழுத்து சென்று சேதப்படுத்தியது. மேலும் அருகில் இருந்த 3 இருசக்கர வாகனங்களையும் சேதப்படுத்தியது. இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. காட்டெருமை காரை முட்டி சேதப்படுத்தும் காட்சிகள் சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்