மின்கம்பம் மீது மோட்டார்சைக்கிள் மோதி பெயிண்டர் சாவு

கீழையூர் அருகே மின்கம்பம் மீது மோட்டார்சைக்கிள் மோதி பெயிண்டர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-09-14 18:32 GMT

வேளாங்கண்ணி:

கீழையூர் அருகே மின்கம்பம் மீது மோட்டார்சைக்கிள் மோதி பெயிண்டர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்கம்பத்தில் மோதியது

நாகை மாவட்டம் கீழையூர் போலீஸ் சரகம் மேலப்பிடாகை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவரது மகன் மணிமாறன் (வயது 37). பெயிண்டரான இவர் தனது மோட்டார்சைக்கிளில் கடந்த 10-ந்தேதி வாழக்கரையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு பின்னர் வீடு திரும்பினார். அப்போது திருக்குவளையிலிருந்து மேலப்பிடாகை செல்லக்கூடிய சாலையில் மீனம்நல்லூர் என்ற இடத்தில் வந்தபோது, மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி அருகில் உள்ள மின்கம்பத்தில் மோதியது.

விசாரணை

இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனி்ன்றி நேற்றுமுன்தினம் மணிமாறன் இறந்தார். இதுகுறித்து திருக்குவளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மணிமாறனுக்கு மாதவி என்ற மனைவியும், மூன்று ஆண் குழந்தைகளும் உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்