மாவட்டத்தில் ரூ.10 ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்க இலக்கு

2022-2023-ம் நிதி ஆண்டில் ரூ.10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளநிலையில் அதற்கான திட்ட அறிக்கையை கலெக்டர் மேகநாத ரெட்டி வெளியிட்டார்.

Update: 2022-06-03 19:59 GMT

விருதுநகர்,

2022-2023-ம் நிதி ஆண்டில் ரூ.10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளநிலையில் அதற்கான திட்ட அறிக்கையை கலெக்டர் மேகநாத ரெட்டி வெளியிட்டார்.

திட்ட அறிக்கை

மாவட்டத்தில் உள்ள பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள், கிராமப்புற வங்கிகள், விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கங்கள் என மொத்தம் 526 வங்கி கிளைகள் உள்ளன. இந்த வங்கிகளுக்கான 2022-2023-ம் நிதியாண்டிற்கான கடன் திட்ட இலக்கு நிர்ணயித்து அதற்கான அறிக்கை நேற்று கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற வங்கியாளர் கூட்டத்தில் கலெக்டர் மேகநாத ரெட்டியால் வெளியிடப்பட்டது.

இந்த கடன் திட்டங்களின் இலக்கானது அனைத்து வங்கிகளின் கடந்த நிதி ஆண்டின் நிதி நிலைமையின் அடிப்படையிலும், நபார்டு வங்கியின் வளம் சார்ந்த கடன்திட்ட இலக்கினையும் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது.

ரூ.10 ஆயிரம் கோடி

இந்த நிதியாண்டில் கடன் இலக்காக ரூ. 10 ஆயிரத்து 365 கோடியே 67 லட்சம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கடன்திட்ட இலக்கானது கடந்த நிதியாண்டின் இலக்கை விட ரூ. 2 ஆயிரத்து 39 கோடியே 37 லட்சம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

கூட்டத்தில் மாவட்ட நபார்டு வங்கியின் துணை பொது மேலாளர் ராஜா சுரேஷ்வரன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தூத்துக்குடி மண்டல மேலாளர் நாகையா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாண்டிச்செல்வன், அனைத்து வங்கியாளர்கள் மற்றும் அரசு துறை மாவட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்