அத்திக்கடவு-அவினாசி திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் செயல்பாட்டுக்கு வர வாய்ப்பு - அதிகாரிகள் தகவல்

அவினாசி அத்திக்கடவு-அவினாசி திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் செயல்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2022-05-19 20:46 GMT

திருப்பூர்,

காவிரியில் கலக்கும் பவானி ஆற்றின் உபரி நீரை பயன்பாட்டிற்கு கொண்டுவருவதே அத்திக்கடவு - அவினாசி திட்டமாகும். பவானி ஆறு கடைசியாக காவிரியில் கலக்கும் இடத்தில் இருந்து உபரி நீரை எடுத்து குழாய் மூலம் பம்பிங் செய்து குளம் குட்டைகளுக்கு கொண்டுவரும் வகையில் இத்திட்டம் உறுவாக்கப்பட்டுள்ளது. இதற்காக 6 இடங்களில் ராட்சத நீரேற்றுநிலையங்களும், 953 கி.மீட்டருக்கு குழாய்களும் பதிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டத்தில் 1,045 குளம் குட்டைகளில் நீர் நிரப்பப்பட உள்ளது. திட்டத்தில் பயன்பெறும் குளங்களில் செறிவூட்டப்படவேண்டிய தண்ணீரின்அளவை கண்காணிக்க சூரிய சக்தியால் இயங்கும் நவீன உபகரனங்கள்பொருத்தும் பணி 2 மாதங்களாக நடந்துவருகிறது. இதுவரை 110 குளங்களில் நவீன உபகரணம் பொருத்தப்பட்டுள்ளது.

பயன்பாட்டிற்கு வரும் இத்திட்டம் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துகுடிநீர் தட்டுப்பாடு நீங்குவதுடன் திருப்பூர், அவினாசி, அன்னூர், சூலூர், பெருந்துறை, சென்னிமலை, நம்பியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர், ஊத்துக்குளி, பெரியநாயக்கன்பாளையம் மற்றும் காரமடை ஆகிய 13 ஒன்றியங்களில் 24 ஆயிரத்து 468 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெற வாய்ப்புள்ளதாகவும், வருகிற செப்டம்பர் மாதத்தில் திட்டம் செயல்பாட்டிற்கு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்