கோவில் பூட்டை உடைத்த மர்மஆசாமி

கோவில் பூட்டை உடைத்த மர்மஆசாமி

Update: 2023-02-27 20:42 GMT

அழகியபாண்டியபுரம்:

பூதப்பாண்டி அருகே உள்ள கடுக்கரை பிள்ளையார் நகர் பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார். இவர் கடுக்கரை ஆதிவிநாயகர் கோவில் நிர்வாகியாக உள்ளார்.

சம்பவத்தன்று இவர் கோவிலுக்கு சென்று பார்த்த போது கோவிலின் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு ஆம்ப்ளிபயர் சேதமடைந்து கிடந்தது. யாரோ மர்மஆசாமி புகுந்து சேதப்படுத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து சசிக்குமார் பூதப்பாண்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்