கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

காட்டுமலையனூர் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார்.

Update: 2023-03-14 12:52 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த காட்டுமலையனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. காட்டுமலையனூர் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாயகி அருணாசலம் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம், ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணு, ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துவடிவு முனியன், ராஜேந்திரன், பாக்கியலட்சுமி லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழ்பென்னாத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் சரவணன் வரவேற்றார். முகாமை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்து, கர்ப்பிணிகளுக்கு சுகாதார பெட்டகம் மற்றும் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலை வழங்கி பேசினார்.

முகாமில் காய்ச்சல், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், தோல் நோய், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கான மருத்துவம், வாய்ப்புற்று நோய் உள்பட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதில் செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார மருத்துவ அலுவலர் வேட்டவலம் விஜயகுமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்