கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

கங்களாஞ்சேரி ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2022-07-04 13:06 GMT

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் கங்களாஞ்சேரி ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.முகாமிற்கு கங்களாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ரத்த பரிசோதனை, ஈ.சி.ஜி. பரிசோதனை, ஸ்கேன், பொது மருத்துவம், கண் மருத்துவம், பல் மருத்துவம், சித்த மருத்துவம், யோகா, பிசியோதெரபி, காது மூக்கு தொண்டை மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. முகாமில் கங்களாஞ்சேரி பகுதிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். இதில் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சிவக்குமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கவிதா தியாகராஜன், சுகாதார ஆய்வாளர் ஏசுநாதன் மற்றும் செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆஸ்பத்திரி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்