வாலிபர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

Update: 2023-05-18 18:45 GMT

பண்ருட்டி, 

பண்ருட்டி அருகே நடுக்குப்பம் பாப்பான்கொல்லையை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 55). தொழிலாளி. இவர் கடந்த 31.7.2023 அன்று சொரத்தங்குழி பஸ் நிறுத்தம் அருகில் நடந்து சென்றார். அப்போது அவரை அதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகன் மாம்பழம் என்கிற அசோக்ராமன் (வயது 26) என்பவர் வழிமறித்து, ஆபாசமாக திட்டி அவரிடம் இருந்த 100 ரூபாயை வழிப்பறி செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது பற்றி பழனிவேல் முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் வழக்குப்பதிவு செய்து, அசோக்ராமனை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தார். இவர் மீது முத்தாண்டிக்குப்பம், நெய்வேலி தெர்மல் ஆகிய போலீஸ் நிலையங்களில் 10 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவின்பேரில் மாம்பழம் என்கிற அசோக்ராமனை முத்தாண்டிக்குப்பம் போலீசார், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, அதற்கான உத்தரவு நகலை கடலூர் சிறையில் இருக்கும் அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்