திருக்கோவிலூர் அருகே 2 வயது குழந்தையை கொலை செய்த சித்தப்பா மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
திருக்கோவிலூர் அருகே 2 வயது குழந்தையை கொலை செய்த சித்தப்பா மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
திருக்கோவிலூர் அருகே
2 வயது குழந்தையை கொலை செய்த சித்தப்பா மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
திருக்கோவிலூர், அக்.23-
திருக்கோவிலூர் அருகே 2 வயது குழந்தையை கொலை செய்த சித்தப்பா மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
2 வயது குழந்தை கொலை வழக்கு
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள திருப்பாலபந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி மகன் ராஜேஷ் (வயது 22). இவர் தனது அண்ணன் குருமூர்த்தியின் மகன் திருமூர்த்தி என்ற 2 வயது குழந்தையை கடந்த மாதம் 17-ந்தேதி கொலை செய்து, உடலை வீட்டில் இருந்த ஸ்பீக்கர் பாக்சில் மறைத்து வைத்து தடயங்களை அழித்த வழக்கில் திருப்பாலப்பந்தல் போலீசாரால் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருடைய செயல் பொது அமைதி மற்றும் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு பாதகமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாலும், இவர் ஜாமீனில் வெளியே வந்தால் மேலும் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதாலும், இவருடைய குற்ற செயலை கட்டுபடுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் பரிந்துரையின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார், ராஜேஷை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
குண்டர் சட்டத்தில் கைது
இதற்கான உத்தரவு நகல் மத்திய சிறையில் இருக்கும் ராஜேஷிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபடுவோர்மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.