அண்ணாமலை பாதயாத்திரை தோல்வி அடைந்து விட்டது
அண்ணாமலை பாதயாத்திரை தோல்வி அடைந்து விட்டது என்று திருநாவுக்கரசர் எம்.பி. கூறினார்.
புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:- ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியாகும். அவர் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அரசியல் நாகரீகத்தோடு பேச வேண்டும். இந்தி திணிப்பை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. அவர் செல்வது பாத யாத்திரை இல்லை. சிறிது தூரம் நடந்து விட்டு காரில் பயணம் செய்கிறார். காரில் தான் யாத்திரை மேற்கொள்கிறார். அவரது பாத யாத்திரை தோல்வி அடைந்துள்ளது. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி என்பது பொருந்தாத கூட்டணி. கர்நாடகாவில் மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் இரு கட்சிகள் பேசி தீர்வு காண முடியாது. சட்டரீதியாக தான் தீர்வு காண முடியும். என்.எல்.சி. விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எந்த பாதிப்பும் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.