அடவிநயினார் அணை மீண்டும் நிரம்பியது
அடவிநயினார் அணை மீண்டும் நிரம்பி உள்ளது.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே மேக்கரை பகுதியில் அனுமன் நதிக்கு குறுக்கே 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் கடந்த 13-ந் தேதி அணை முழு கொள்ளளவை எட்டி தண்ணீர் வழிந்தோடியது. அதன் பின்னர் மழை இல்லாததால் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த சாரல் மழையால் அடவிநயினார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் நேற்று மீண்டும் அணை நிரம்பி, தண்ணீர் சென்றனர். இந்த அணைக்கு வரும் 40 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இந்த மாதத்தில் அடவிநயினார் அணை 2 முறை நிரம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.