அருள்புரம்
திருப்பூர் மாநகராட்சி 53-வது வார்டுக்குட்பட்ட வீரபாண்டி பிரிவிலிருந்து குப்பாண்டம்பாளையம் செல்லும் சாலையில் குடியிருப்புகள்,தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகும். இந்த சாலை எப்பொழுதும் போக்குவரத்து நிறைந்த சாலையாகும். 4-வது குடிநீர் குழாய் பாதிக்க இந்த சாலையின் நடுவில் குழி தோண்டி குழாய் பதிக்கப்பட்டது. இந்த சாலை தோண்டி ஒரு வருடம் ஆகிறது. இந்த சாலை சரியாக மூடவில்லை. இதனால் தினந்தோறும் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் சரவணனிடம் கேட்ட போது 4-வது மண்டல இளநிலை பொறியாளர் கோவிந்து பிரபாகரன் அவர் அனுமதி கடிதம் கொடுக்க வேண்டும் என்று அவர் கடிதம் கொடுத்தால் உடனடியாக சாலை சீரமைக்கப்படும் என்று கூறியுள்ளார். கடிதம் கொடுக்க இளநிலை பொறியாளர் காலம் தாழ்த்தி வருவதால் தினந்தோறும் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இது குறித்து மேயர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும், 53-வது வார்டு உறுப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.