திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் செயலாளர் ரங்கராஜ், தலைவர் மூர்த்தி, துணைத்தலைவர் பாலன் உள்ளிட்டவர்கள் தலைமையில் தூய்மைப்பணியாளர்கள் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி, நகராட்சிகளில் தூய்மைப்பணிகளை அவுட்சோர்சிங் முறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து வரும் தூய்மைப்பணியாளர்கள், குடிநீர், ஓட்டுனர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஊதியக்குறைப்பு, ஆட்குறைப்பு என பல்வேறு வகைகளில் ஒப்பந்ததாரர்களால் துன்புறுத்தப்படுகிறார்கள். தினக்கூலி தூய்மைப்பணியாளர்களுக்கு ரூ.610, குடிநீர் திறப்பாளர், ஓட்டுனருக்கு ரூ.757, அரசாணைப்படி கலெக்டர் நிர்ணயித்த அடிப்படை தினசரி ஊதியமாக ஒப்பந்ததாரர்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா நடைபெற்றது. பின்னர் கோரிக்கை அடங்கிய மனுவை கலெக்டரிடம் அளித்தனர்.