சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் இடிப்பு

Update: 2022-07-06 16:36 GMT


தாராபுரத்தில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்பு

தாராபுரம் பெரியகடைவீதி, பொள்ளாச்சி ரோடு, தாலுகா அலுவலக சாலை, பூங்காசாலை, ஐந்துமுனை சந்திப்பு ஆகிய பகுதிகளில் சாலைப் போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் விதமாக சாலையை ஆக்கிரமித்து வணிகவளாகங்கள், கடைகளின் படிக்கட்டுகள் கட்டப்பட்டிருந்தது. இதனால் கடைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு செல்வோர் வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி செல்கின்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு விபத்துகளும் ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து புகார் வந்ததை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோர ஆக்கிரமிப்புகளை சம்பந்தபட்டவர்கள் அகற்றி கொள்ளுமாறு ஆட்டோ மூலம் கடந்த ஒரு வார காலமாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து சில கடைக்காரர்கள் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றி கொண்டனர். ஆனால் பெரும்பாலான கடைக்காரர்கள் ஆக்கிரமிப்புகளை அகசாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் இடிப்புசாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் இடிப்புற்றவில்லை. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் மற்றும் கனரக வாகனங்கள் மூலம் பெரியகடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

நகர் முழுவதும் நடவடிக்கை

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது " தாராபுரம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அகலமாக இருந்த சாலையில் ஏராளமான கடைகள்உரிமையாளர்கள் சாலையை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அவசர காலத்துக்கு விரைவாக செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் தாராபுரம் நகர் முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகள் இரண்டு நாட்களுக்குள் அகற்றப்படும்" என்றனர்.

அப்போது நகராட்சி ஆணையாளர் ராமர்நகராட்சி பொறியாளர் சண்முகம், உதவி பொறியாளர் காளீஸ்வரி மற்றும் நெடுஞ்சாலை பணியாளர்கள், நகராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் ஆக்கிரமிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்