புனிதர் பட்டம் பெற்ற தேவசகாயத்திற்கு நன்றி திருப்பலி

வடக்கன்குளத்தில் புனிதர் பட்டம் பெற்ற தேவசகாயத்திற்கு நன்றி திருப்பலி நடந்தது.

Update: 2022-07-03 18:03 GMT

வடக்கன்குளம்:

நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தில் புதுமை பரலோக அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இங்கு சமீபத்தில் புனிதர் பட்ட பெற்ற தேவ சகாயம் பிள்ளை இங்குதான் ஞானஸ்நானம் பெற்றார். இதையொட்டி புனிதர் பட்டம் பெற்ற அவருக்கு நன்றி திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக ஐதராபாத் கர்தினால் அந்தோனி பூலா, நெல்லை தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ஆயர்கள் ஸ்டீபன், இவான் அம்புரோஸ், ரெமிஜியுஸ், ஜூடு பால்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சபாநாயகர் அப்பாவு, ஞான திரவியம் எம்.பி. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். மேலும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த திரளானகிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியையொட்டி பரதநாட்டியம், கோலாட்டம், குச்சிப்புடி போன்ற கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. வடக்கன்குளம் பங்குதந்தை ஜாண்பிரிட்டோ வரவேற்றார். நிகழ்ச்சிகளை காவல்கிணறு பங்குதந்தை ஆரோக்கியராஜ் தொகுத்து வழங்கினார். இறுதியாக கர்தினால் தலைமையில் ஆடம்பர கூட்டு நன்றி திருப்பலியுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. விழாவில் அருட்தந்தையர்கள் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை வடக்கன்குளம் பங்கு இறைமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்