தொட்டியம் தூய ஜெயராக்கினி அன்னை ஆலய தேர் பவனி
தொட்டியம் தூய ஜெயராக்கினி அன்னை ஆலய தேர் பவனி நடைபெற்றது.
தொட்டியம்,ஆக.17-
தொட்டியம் தூய ஜெயராக்கினி அன்னை ஆலய தேர் திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் சிறிய தேர் பவனி மற்றும் ஜெபமாலை திருப்பலிகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது. தேர்பவனி ஆலயத்தில் இருந்து தொடங்கி பழைய சேலம் ரோடு, காந்திரோடு, வாணப்பட்டறை வழியாக சென்று திருச்சி-சேலம் மெயின் ரோட்டை அடைந்தது. நிகழ்ச்சிக்கு லால்குடி மறைவட்ட முதன்மை அருட்தந்தை பீட்டர் ஆரோக்கியதாஸ் முன்னிலை வகித்தார். தொட்டியம் பங்கு தந்தையும், புனித மரியன்னை உயர்நிலை பள்ளியின் தாளாளருமான ஆரோக்கியசாமி, அருட்தந்தைகள் பாக்கியசாமி, சாம்சன், தலைமை ஆசிரியர் சேவியர் மற்றும் அருட்தந்தையர்கள், பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.