அரசு பெண்கள் பள்ளியில் தமிழ்கூடல் விழா

Update: 2023-09-27 17:20 GMT


உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று பள்ளி தமிழ் மன்றத்தின் சார்பில் தமிழ்க் கூடல் நிகழ்வு நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் ப.விஜயா தலைமையேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இலக்கிய மன்றச் செயலாளர் வே.சின்னராசு வரவேற்புரை ஆற்றினார்.உதவி தலைமை ஆசிரியர்கள் அ.ஜெயராஜ் தி.மஞ்சுளா முன்னிலை வகித்தனர். முள்ளுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் க.தர்மராஜ் தமிழ் தொன்மை குறித்து சிறப்புரை ஆற்றினார்.

தமிழ்க்கூடல் நிகழ்வை யொட்டி 6 முதல் பிளஸ்-2 வகுப்புகளைச் சேர்ந்த மாணவியர்களுக்கு 3 பிரிவுகளாக பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி நடைபெற்றது. போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டது. மாணவிகள் கனிஷ், சோபியா ரேணு, ஸ்ரீதா, ஜெயச்சித்ரா, ஜீவிகா, மிருதுளா அர்ஷின்சனா ஆகியோர் பேசினார்கள். தமிழ் ஆசிரியர் ஆர்.ராஜேந்திரன் நன்றி கூறினார். தமிழ் ஆசிரியர்கள் தைலியண்ணன், சிவசுந்தரி, கார்த்திகா ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

மேலும் செய்திகள்