தச்சமொழி சுடலை மாடசாமி கோவில் திருவிழா

தச்சமொழி சுடலை மாடசாமி கோவில் திருவிழா நடைபெற்றது.

Update: 2022-08-18 10:13 GMT

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் தச்சமொழி சுடலைமாடசுவாமி கோவில் கொடை விழா 3 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் 12 மணிக்கு உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து சிறப்பு பூஜை, இரவு 8மணிக்கு மாக்காப்பு பூஜை, அலங்கார தீபாராதனை, இரவு 10மணிக்கு வில்லிசை, 12மணிக்கு சிறப்பு பூஜை, 2-ஆம் நாள் காலை 10மணிக்கு சுடலைமாட சுவாமி, பிரமசக்தி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், 12.30மணிக்கு அம்பாள் மஞ்சள் நீராடுதல், மாலை 6மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு அனைத்து சுவாமிகளுக்கும் அலங்கார சிறப்பு பூஜை, இரவு 12மணிக்கு சாமக்கொடை, தீபாராதனை நடந்தது. 3-ஆம் நாள் காலையில் சிறப்பு பூஜை, 12மணிக்கு கிடா வெட்டி சிறப்பு பூஜை, சுவாமி உணவு எடுத்தல், இரவு சிறப்பு அன்னதானம், மாலை சிறுவர், சிறுமியருக்கு விளையாட்டு போட்டிகள், இரவு 8மணிக்கு போட்டியில் வென்றவர்களுக்கு பபரிசுகள் வழங்கல், தொடர்ந்து பட்டிமன்றம், சிறப்பு கலை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டது. சிறுவர், சிறுமிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்