ஜவுளிக்கடை உரிமையாளர் விபத்தில் சாவு
தூத்துக்குடியில் ஜவுளிக்கடை உரிமையாளர் விபத்தில் பரிதாபமாக இறந்து போனார்.
தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 55). இவர் எட்டயபுரம் ரோட்டில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் புதிய பஸ் நிலையத்துக்கு சென்றார். மேம்பாலம் அருகே சென்ற போது, நிலைதடுமாறி மின்கம்பம் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சுப்பிரமணியன் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.