பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் அனுப்பும் பணி மும்முரம்

பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் அனுப்பும் பணி மும்முரம்

Update: 2022-06-02 13:30 GMT

உடுமலை

உடுமலை வட்டாரத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு 2022-2023-ம் கல்வி ஆண்டிற்கான புத்தகங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

பாடபுத்தகங்கள்

உடுமலை வட்டாரத்தில் அரசு தொடக்கப்பள்ளிகள் 93-ம், நடுநிலைப்பள்ளிகள் 25-ம் உள்ளன. இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 2022-2023-ம் கல்வி ஆண்டிற்கான புத்தகங்கள், உடுமலை சர்தார் வீதியில் உள்ள நகராட்சி எக்ஸ்டன்சன் நடுநிலைப்பள்ளிக்கு (பூங்காபள்ளி) வந்துள்ளது. 1-ம் வகுப்பிற்கு 1,435 மாணவர்களுக்கான பாடபுத்தகங்களும், 2-ம் வகுப்பிற்கு 1,437 மாணவர்களுக்கான பாடபுத்தகங்களும், 3-ம் வகுப்பிற்கு 1,295 மாணவர்களுக்கான பாடபுத்தகங்களும், 4-ம் வகுப்பிற்கு 1,380 மாணவர்களுக்கான பாடபுத்தகங்களும், 5-ம் வகுப்பிற்கு 1,522 மாணவர்களுக்கான பாடபுத்தகங்களும் என 5-ம் வகுப்பு வரையிலான 7,069 மாணவர்களுக்கான பாடபுத்தகங்கள் வந்துள்ளன.

அதேபோன்று 6-ம் வகுப்பிற்கு 575 மாணவர்களுக்கான பாட புத்தகங்களும், 7-ம் வகுப்பிற்கு 575 மாணவர்களுக்கான பாடபுத்தகங்களும், 8-ம் வகுப்பிற்கு 530 மாணவர்களுக்கான பாடபுத்தகங்களும் என 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான 1,680 மாணவர்களுக்கான பாடபுத்தகங்களும் வந்துள்ளன.

தொடக்கப்பள்ளிகள்

இதில் முதல்கட்டமாக 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கான பாடபுத்தகங்கள், அந்தந்த பள்ளிகளுக்கு எந்த அளவிற்கு தேவையோ அந்த அளவிற்கு அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்த பணிகள் உடுமலை வட்டார கல்வி அலுவலர்கள் மனோகரன், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையில் நடந்து வருகிறது. அடுத்த கட்டமாக 6-ம் வகுப்பு முதல்8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பாடபுத்தகங்களை வருகிற 6-ந்தேதி முதல் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

---

2 காலம்

உடுமலையில் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு பாடபுத்தகங்களை பிரித்து அனுப்பும் பணி நடந்தபோது எடுத்தபடம்

Tags:    

மேலும் செய்திகள்