தடய அறிவியல் நிபுணர்கள் சோதனை

பட்டாசு வெடித்ததில் குடோன் தரைமட்டமான இடத்தில் தடய அறிவியல் நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

Update: 2022-11-09 19:27 GMT

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் பெருமாள்(வயது 35). இவருக்கு சொந்தமான பட்டாசு குடோன், விளங்கம் கிராமத்தில் உள்ளது. இந்த குடோனில் தொழிலாளர்கள் பட்டாசு தயார் செய்து, அதனை குடோனில் வைத்து பூட்டிச் சென்றனர்.

இந்த நிலையில் பட்டாசு குடோனில் இருந்த பட்டாசுகள் வெடித்தது. இதில் குடோன் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி தரைமட்டமானது. இது குறித்து மணலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருக்கோவிலூர் தாசில்தார் கண்ணன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இந்த நிலையில் நேற்று தடய அறிவியல் நிபுணர்கள் பட்டாசு வெடித்ததில் தரைமட்டமான குடோனில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு சிதறி கிடந்த வெடிபொருட்களை ஆய்வுக்காக சேகரித்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்