திருச்செந்தூர்-நெல்லை இடையே மின்சார ரெயில் இயக்கி சோதனை ஓட்டம்

திருச்செந்தூர்-நெல்லை இடையே திங்கட்கிழமை மின்சார ரெயில் இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது.

Update: 2022-12-19 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர்-நெல்லை இடையே திங்கட்கிழமை மின்சார ரெயிலை இயக்கு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

ரெயில் பாதை மின்மயமானது

திருச்செந்தூர் முதல் நெல்லை வரை அகல ரெயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்தது. இந்நிலையில் நேற்று(திங்கட்கிழமை) தெற்கு ரெயில்வே தலைமை முதன்மை மின் பொறியாளர் சித்தார்த்தா தலைமையில் ஆய்வு பணி நடந்தது. இதையடுத்து மின் என்ஜின் பொருத்திய ரெயில் நெல்லையிலிருந்து மதியம் 1.30 மணிக்கு திருச்செந்தூர் வந்தது. பின்னர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் என்ஜின் முழுவதும் பூ மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, தேசிய கொடி கலரில் ஏராளமான பலுன்கள் கட்டப்பட்டிருந்தது. பின்னர் ரெயில் என்ஜின் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

நெல்லை புறப்பட்டு சென்றது

தொடர்ந்து மாலை 3.05 மணிக்கு மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட ரெயில் நெல்லைக்கு சோதனை ஓட்டமாக புறப்பட்டு சென்றது. வழிநெடுகிலும் ரெயிலின் வேகம் சோதனை செய்யப்பட்டது.

இந்த ரெயில் சோதனை ஓட்டத்தில் தென்னக ரயில்வே தலைமை திட்ட இயக்குனர் சமீர் டிகே, தலைமை மின்பகிர்வு பொறியாளர் சுந்தரேசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்