மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் பணியிடை நீக்கம்
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சிவகங்கையை அடுத்த ஒரு கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணிபுரிபவர் விநாயக சவுத்ரி. இவர் அந்த பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இது தொடர்பாக மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து பள்ளி மேலாண்மை குழுவினர், முதன்மை கல்வி அலுவலருக்கு புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் விநாயக சவுத்ரியை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் உத்தரவிட்டார்.