பண்டகசாலை தலைவர் பணியிடை நீக்கம்
பண்டகசாலை தலைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை தலைவராக இருப்பவர் நாகராஜன். இவரை அப்பதவியில் இருந்து நீக்கி கூட்டுறவு இணை பதிவாளர் ஜீனு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், நிர்வாக காரணங்களுக்காக கூட்டுறவு பண்டகசாலை தலைவர் நாகராஜன் பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவருக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது, என்றார்.