தென்காசி: கள்ளநோட்டை அச்சடித்து புழக்கத்தில் விட்ட இருவர் கைது

தென்காசி மாவட்டத்தில் கள்ளநோட்டை அச்சடித்து புழக்கத்தில் விட்ட இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

Update: 2022-08-19 10:27 GMT

தென்காசி,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். தகவலின் பேரில், சங்கரன்கோவில் பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது, பேருந்து நிலையம் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நாகராஜ், காஜா நசூரிதின் ஆகிய இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர்களிடமிருந்து 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்