அரூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில்இன்று முதல் பருத்தி ஏலம் தொடக்கம்

Update: 2022-12-25 18:45 GMT

அரூர்:

அரூர் வேளாண்மை கூட்டுறவு உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கத்தின் சார்பில் கூட்டுறவு சங்க வளாகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் பருத்தி ஏலம் தொடங்கி நடைபெற உள்ளது. வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் பருத்தி ஏலமும், வெள்ளிக்கிழமையில் மஞ்சள் ஏலமும், பொம்மிடி கிளையில் புதன்கிழமைதோறும் பருத்தி ஏலமும் நடைபெறுகிறது. சேலம், கொங்கணாபுரம், ஈரோடு, கோவை, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து பருத்தியை ஏலத்தில் எடுக்க உள்ளனர். இந்த தகவலை சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்