ஓ.சவுதாபுரத்தில் ரூ.8 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
ஓ.சவுதாபுரத்தில் ரூ.8 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
வெண்ணந்தூர்:
வெண்ணந்தூர் அடுத்த ஓ.சவுதாபுரம் பகுதியில் உள்ள ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க மையத்தில் பருத்தி ஏலம் நடந்தது. ஓ.சவுதாபுரம், ஓலைப்பட்டி, செம்மாண்டப்பட்டி, அளவாய்ப்பட்டி, நடுப்பட்டி, பழந்தின்னிபட்டி, தொட்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். ராசிபுரம், கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, ஆத்தூர் பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து ஏலத்தில் கலந்து கொண்டனர். சுரபி ரக பருத்தி 213 மூட்டைகள் கொண்டு வரப்பட்டு இருந்தன. சுரபி ரக பருத்தி குறைந்தபட்சமாக குவிண்டால் ரூ.9,912 முதல் அதிகபட்சமாக குவிண்டால் ரூ.11,801-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மொத்தம் ரூ.8 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.