திருச்செங்கோட்டில் ரூ.16¾ லட்சத்துக்கு பருத்தி ஏலம்
திருச்செங்கோட்டில் ரூ.16¾ லட்சத்துக்கு பருத்தி ஏலம்
எலச்சிபாளையம்:
திருச்செங்கோட்டில் நேற்று நடந்த ஏலத்தில் ரூ.16¾ லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.
பருத்தி ஏலம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மாணிக்கம்பாளையம் மையத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வந்தனர். சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தியை ஏலத்தில் எடுத்தனர்.
492 மூட்டைகள்
இதில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ரூ.10,600 முதல் ரூ.11,996 வரையும், சுரபி ரக பருத்தி குவிண்டால் ரூ.10,500 முதல் ரூ.11,608 வரையிலும் விற்பனையானது. மொத்தம் 492 மூட்டை பருத்தி ரூ.16.78 லட்சத்துக்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.