பரமத்திவேலூர் சந்தையில் ரூ.12 லட்சத்து 91 ஆயிரத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
பரமத்திவேலூர் சந்தையில் ரூ.12 லட்சத்து 91 ஆயிரத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 17 ஆயிரத்து 172 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.83.99-க்கும், குறைந்தபட்சமாக ரூ.63.19-க்கும், சராசரியாக ரூ.82.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.13 லட்சத்து 78 ஆயிரத்து 324-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 16 ஆயிரத்து 320 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.84.26-க்கும், குறைந்தபட்சமாக ரூ.71.09-க்கும், சராசரியாக ரூ.81.70-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.12 லட்சத்து 91 ஆயிரத்து 235-க்கு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.