கூட்டுறவு சங்க தலைவர் தற்காலிக பதவி நீக்கம்
கூட்டுறவு சங்க தலைவர் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சரக துணைப்பதிவாளர் கட்டுப்பாட்டில் ஏம்பல் அருகே செயல்பட்டு வரும் ஒய்.ப்பி 603 மதகம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவராக பதவி வகித்து வந்தவர் மாரிமுத்து. இவர் சங்கத்தின் அனைத்து நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு நிா்வாக குழு கூட்டத்திற்கான முறையான கூட்ட அழைப்பு மற்றும் கூட்டப்பொருள் அனுப்பி வைக்காமல் நிர்வாக குழு கூட்டத்தை நடத்துவதாகவும், நிர்வாக குழு உறுப்பினர்களை முறையற்ற வகையில் தகுதி நீக்கம் செய்துள்ளதாகவும், இவ்வாறாக கூட்டுறவு சட்டம் மற்றும் விதிகளுக்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் இச்சங்கத்தின் தலைவர் மாரிமுத்து மீது நடவடிக்கை எடுக்க அறந்தாங்கி சரக துணை பதிவாளர், புதுக்கோட்டை மண்டல இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத்திற்கு பரிந்துரை செய்தார். அதன்படி தலைவர் பதவியில் இருந்து மாரிமுத்துவை தற்காலிக பதவி நீக்கம் செய்து மண்டல இணைப்பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும் சங்கத்தின் துணை தலைவர் பதவியில் உள்ளவர், தலைவர் பதவியையும் நிர்வகிக்க ஆணையிட்டுள்ளார்.