களியக்காவிளை:
களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அதன்கோடு பகுதியை சேர்ந்தவர் உஷா (வயது 45). இவர் தனக்கு சொந்தமான இடத்தில் செம்மண் நிரப்ப முறையாக அனுமதி பெறாமல் டெம்போவில் செம்மண் கொண்டு சென்றுள்ளார். இதனை அறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செம்மண் கடத்திய டெம்போவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக உஷா மற்றும் டெம்போ டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.