செம்மண் கடத்திய டெம்போ பறிமுதல்
திருவட்டார் அருகே செம்மண் கடத்திய டெம்போ பறிமுதல்
திருவட்டார்,
குமரன்குடி கிராம நிர்வாக அலுவலர் ஜெகன் அருள் வேர்க்கிளம்பி கரியமங்கலத்துவிளை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்ேபாது அந்த வழியாக வந்த டெம்போ நிறுத்தி சோதனையிட்ட ேபாது செம்மண் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதற்கிடையே டிரைவர் இறங்கி தப்பி ஓடினார்.
இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் டெம்போவை பறிமுதல் செய்து திருவட்டார் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கபெருமாள் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடிய டெம்போ டிரைவரை தேடி வருகிறார்.