செம்மண் கடத்திய டெம்போ பறிமுதல்
தக்கலை அருகே செம்மண் கடத்திய டெம்போ பறிமுதல் செய்யப்பட்டது.
தக்கலை:
தக்கலை அருகே செம்மண் கடத்திய டெம்போ பறிமுதல் செய்யப்பட்டது.
தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு கைதகுழி பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் செம்மண் கடத்துவதாக தக்கலை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு டெம்டோவில் செம்மண் ஏற்றிக்கொண்டிருந்ததை கண்டனர். உடனே போலீசார் அவர்களை மடக்கிப்பிடிக்க முயன்றனர். இதில் டெம்போ டிரைவரான காட்டாத்துறை பகுதியை சேர்ந்த ஷாஜன் (வயது25) என்பவர் மட்டும் சிக்கினார். மற்ற 2 பேர் தப்பியோடி விட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டெம்போவை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஷாஜனை கைது செய்ததுடன், தப்பியோடிய அஜித் (24), விஜி (30) ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.