கோவில் வருசாபிஷேக விழா
பாவூர்சத்திரம் சித்தி விநாயகர் கோவில் வருசாபிஷேக விழா நடந்தது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகில் சித்தி விநாயகர் கோவிலில் வருசாபிஷேக விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலையில் கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.