நல்லம்பள்ளி அருகே மகாசக்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
நல்லம்பள்ளி அருகே மகாசக்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூர் கிராமத்தில் மகாசக்தி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 27-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து ஊர்மாரியம்மன், காளியம்மன், மகாமாரியம்மன் ஆகிய சாமிகளுக்கு மாவிளக்கு எடுத்தல், அக்னி கரகம், பூங்கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி பக்கர்கள் ஆடு, கோழி பலியிட்டும், அலகு குத்தியும் வழிபட்டனர். விழாவின் முக்கிய நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அம்மன்கள் சிறப்பு அலங்காரத்தில் தேர்களில் எழுந்தருளினர். தொடர்ந்து ராஜவீதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேர்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.