கோவில் பூசாரி தீக்குளித்து தற்கொலை
குளித்தலையில் கோவில் பூசாரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவில் பூசாரி
கரூர் மாவட்டம், குளித்தலை பேராளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பண்ணன் (வயது 40). இவர் பேராளகுந்தாளம்மன் கோவில் பூசாரியாக இருந்தார். இந்தநிலையில், சம்பவத்தன்று, கருப்பண்ணன் தனது வீட்டில் தனக்குத்தானே உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டுள்ளார். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் மற்றும் அவரது உறவினர்கள் தீக்காயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
சாவு
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி கருப்பண்ணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.