கோவில் கொடை விழா
உடன்குடி சோமநாதபுரம் வேம்படி சுடலைமாடகோவில் கொடை விழா நடைபெற்றது.
உடன்குடி:
உடன்குடி சோமநாதபுரம் வேம்படி சுடலைமாட சுவாமி கோவில் கொடை விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை, கும்பம் ஏற்றி சிறப்பு அலங்கார பூஜை, சிறப்பு பூஜை, சாமக்கோடை விழா நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி தில்லைவனம் செல்லுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.