போத்தியம்மன் கோவில் கொடை விழா
நெல்லை ராமையன்பட்டி போத்தியம்மன் கோவில் கொடை விழா நடக்கிறது.
ராமையன்பட்டி:
நெல்லை ராமையன்பட்டியில் நெல்லை- சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் அமைந்துள்ள போத்தியம்மன் ேகாவில் கொடை விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. முன்னதாக நேற்று மாக்காப்பு பூஜையுடன் விழா தொடங்கியது. இன்று (திங்கட்கிழமை) குடியழைப்பு மற்றும் இரவில் வில்லிசை, மகுட ஆட்டம், சாஸ்தா பிறப்பு பூஜை நடக்கிறது.
நாளை காலை 10 மணிக்கு அக்ரஹாரம் விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வருதல், கும்ப அபிஷேகம், பால் அபிஷேகம் நடக்கிறது. பின்னர் மதியம் 12 மணிக்கு மதிய கொடையும், இரவு 8 மணிக்கு அலங்கார பூஜையும் நடக்கிறது. இரவு 12 மணிக்கு சாமக்கொடை மற்றும் மகா பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.